RSS

புலிக்கு உடம்பில் கோடு வந்தது எப்படி? | நகைசுவை அறிவு கதைகள்

ஒருநாள் வயல்வெளியில் புலி ஒன்று எருமையைச் சந்திக்க நேரிட்டது.

அப்போது எருமையைப் பார்த்த புலி, ""நீ உருவத்தில் பெரிதாக இருக்கிறாய். உன்னைப் பார்த்தால் பலசாலி போலவும் தெரிகிறது. ஆனால், உன்னை விட உருவத்தில் சிறியவனான மனிதன் உன் முதுகில் முகத்தடியை வைத்து நிலத்தை உழ வைக்கிறான். அப்படி உன்னை ஆட்கொள்கிற அளவிற்கு அவனிடம் என்ன சக்தி இருக்கிறது,'' எனக் கேட்டது புலி.

 ""எனது எஜமானனிடம் அறிவு இருக்கிறது,'' என்றது எருமை.

""அறிவு என்றால் எத்தகைய அறிவு?'' என்று புலி கேட்டது.

""எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், எனது நண்பர்கள் எல்லா விலங்குகளையும் ஆட்டிப் படைக்கும் அறிவு மனிதனுக்கு இருப்பதாகக் கூறினர்,'' என்றது எருமை.

""அப்படியென்றால் எனக்கும் அந்த அறிவு கிடைக்குமா?'' 

""அதை எனது எஜமானரிடம் கேட்டால்தான் தெரியும். இதோ அவரே வருகிறார்,'' என்றது எருமை.

அந்த நேரம் பார்த்து அங்கே எருமையின் எஜமானன் வந்து சேர்ந்தான். அவனுக்குப் புலியைக் கண்டதும் நடுக்கம்.

'இனி இங்கிருந்து ஓடினால் புலி நம்மை அடித்துக் கொன்று விடும். அதனால் நடப்பது நடக்கட்டும்' என்று அசட்டுத் துணிச்சலில் ஓடாமல் அங்கேயே நின்று கொண்டான்.

அப்போது புலி விவசாயியிடம் கேட்டது.

""நாங்கள் அறிவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு அறிவைப் பற்றிச் சொல்லுங்கள். அது எனக்கு கொஞ்சம் கிடைக்குமா?'' என்றது.
அதைக் கேட்டதும்தான் விவசாயிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"இனி இந்தப் புலி நம்மை ஒன்றும் செய்யாது' என்று நினைத்த அவன், ""அறிவை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை உனக்கு கொஞ்சம் எடுத்து வருகிறேன். அதனால் இங்கிருந்து நீ போய் விடாதே,'' என்று புலியிடம் கேட்டுக் கொண்டான்.

புலியும், "இனி காட்டு விலங்குகள் எல்லாம் நாம் சொன்னபடி நடக்கும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ""நான் எங்கும் போய் விட மாட்டேன். இங்கேதான் இருப்பேன்,'' என்றது.

""நான் போன பிறகு எருமையை நீ அடித்துச் சாப்பிட்டு விடமாட்டாயே?''

""நிச்சயம் சாப்பிட மாட்டேன்!''

""சரி, உன்னைக் கட்டிப் போட்டால் தப்பாக எடுத்துக் கொள்ளமாட்டாயே?''

""மாட்டேன்!''

புலி அப்படிச் சொன்னதும் அதைப் பிடித்து ஒரு மரத்தில் விவசாயி இறுக்கமாகக் கட்டிப் போட்டான். பிறகு, ""இந்தக் கட்டு களை அவிழ்த்து விட்டு நீ போய் விட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல,'' என்றான் விவசாயி.
புலியும், ""சரி!'' என்றது.

""ஒரு நிமிடம்... அறிவு என்னிடமே இருக்கிறது. நான்தான் மறந்து போய் வீட்டி லிருக்கிறது என்று சொல்லிவிட்டேன்,'' என்றான்.

""அப்படியா? உடனே அதை எனக்கும் கொஞ்சம் கொடு,'' என்றது புலி.

""இதோ, என்றவாறே ஒரு தடியை எடுத்து புலியைக் கண்,மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான் விவசாயி. அவ்வளவுதான், புலி வலியால் துடிதுடிக்க ஆரம்பித்தது.

""ஏய்! முட்டாள் விவசாயி... என்னை எதற்கு அடிக்கிறாய்?''

""நீதானே அறிவை கேட்டாய். அதைத்தான் உன்னிடம் காண்பிக்கிறேன். இனி நீ எனது எல்லைப் பகுதிக்குள் காலடி எடுத்து வைத்தால் அவ்வளவுதான் கொன்றே விடுவேன்,'' என்று சொல்லிவிட்டு விவசாயி அங்கிருந்து சென்று விட்டான்.

புலிக்கோ உடல் முழுக்க சரியான ரத்தக்காயம்... எப்படியோ போராடி கட்டுக்களை அவிழ்த்துக் கொண்டு, தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிவிட்டது.

புலியின் மீது பட்ட அடிதான் நாளடைவில் அதன் கோடுகளாகிப் போனதாம். புலியின் உடலில் கோடுகள் இருப்பதற்கு வியட்நாமிய கிராம மக்கள் இப்படியொரு கதையை கூறுகின்றனர் குட்டீஸ்... புலிக்கு கோடு  வந்தது எப்படின்னு தெரிஞ்சுகிட்டீங்களா?
கதை தானே ஜாலியா எடுத்துக்கோங்க!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அன்னையின் வளர்ப்பு | ஒரு விஞ்ஞானியின் கதை

தமிழ் அறிவு கதைகள் 100 வது பதிவு | தங்களின் ஆதரவுக்கு  நன்றி

நோபல் பரிசு பெற்ற ஒரு விஞ்ஞானி  இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினார் ஆனால் எந்த வேலையையும் ஒருமைப்பாட்டுடன் செய்யவில்லை. அவரின் போக்கை கண்ட அவரின் தாயார் மிகவும் வருந்தினார். ஒருநாள் அவரை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டுவரசொல்லி, காகிதங்களை கீழே போட்டு கண்ணாடியை வெய்யிலில் காட்டினார்.
பூதக்கண்ணாடியை பிடித்த தாயின் கைகள் இங்கும் அங்குமாய் அசைந்து கொண்டிருந்தது. நீண்ட நேரத்திற்கு பிறகு தனது கைகளை பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு நீட்டினார். ஒளியின் ஒருமுனையில் தீ காகிதத்தை எரித்தது. இதை கவனத்துடன் பார்த்த இந்த விஞ்ஞானி ஆச்சரியப்பட்டார். அப்போது தாயார் கூறினார், ஒருமுகபடுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால் ஒருமுகபடுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது. அதுபோல் நீயும் உள்ளத்தை ஒருமுகபடுத்தினால் எந்த வேளையிலும் வெற்றி அடையலாம் என தாயார் அவருக்கு அறிவுரை கூறினார்.

இந்த விஞ்ஞானி தனது மனதில் தாயாரின் வார்த்தைகளை வைத்துக்கொண்டார். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களை செய்ய தொடங்கினார். பிற்காலத்தில் உலகமே போற்றும் சர் சி வி இராமன் ஆனார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்?

மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒருவன்  கால்நடைப் பயணமாகப் ஒரு காட்டின் வழியே சென்றான்.

நீண்ட தூரம் நடந்ததால் அங்கிருந்த ஒரு மரத்தினடியில் படுத்து ஒய்வெடுக்கத் தொடங்கினான். அந்த மரம் நினைப்பதையெல்லாம் தரும் கற்பக மரம் என்பது அவனுக்குத் தெரியாது.


மிகவும் பசியாக இருக்கிறதே எதாவது உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே! என்று நினைத்தான். உடனே ஒரு தட்டு நிறைய உணவு வந்தது. ஆச்சரியமடைந்த அவன் அதைச் சாப்பிடத் தொடங்கினான்.

உணவு சாப்பிட்டதும் உறக்கம் வந்தது. ஒரு தலையணை  இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான், நினைத்தவுடன் தலையணையும் வந்தது.
அதில் ஏறிப் படுத்தான். நடந்து வந்ததால் கால்கள் வலிக்கின்றதே, இரண்டு பேர் கால்களை அமுக்கிவிட்டால் சுகமாக இருக்குமே என்று எண்ணினான்.
உடனே இரண்டு வான் தேவதைகள் அவனருகில் அமர்ந்து அவனது கால்களை அமுக்கி விடத் தொடங்கினார்கள்.

அவனுக்கு மிகவும் சந்தோஷமாகப் போய்விட்டது. இதெல்லாம் எப்படி நடக்கிறது என்பது புரியாமல் மேலும் கீழுமாய்ப் பார்த்தான். எதுவும் புரியவில்லை அவனுக்கு!

உடனே அவனுக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது.

ஆஹா நாம் ஒரு காட்டில் அல்லவா ஓய்வு எடுத்துகொண்டிருக்கிறோம்! புலி ஏதேனும் வந்து நம்மை விழுங்கிவிட்டால் என்ன செய்வது? என நினைத்தான் அதன்படியே புலியும் ஒன்று வந்து அவனை விழுங்கிற்று.

தூய்மையான உள்ளமாக இருந்தால் அங்கு கடவுள் வசிப்பார். அவநம்பிக்கையுடன் இருந்தால்.......?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மரங்கொத்திப் பறவை

சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒருமகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான்.


அவனது சோம்பலை உணர்ந்த அந்த மகான் அவனுக்கு அதை உணர்த்த ஒரு கதையைக் கூறினார் -

ஒரு மரங்கொத்திப் பறவை, தன் கூரிய அலகால் டொக் டொக்கென்று மரத்தைக் கொத்திக் கொண்டே அந்த மரத்தின் மேல் தாவித் தாவி ஏறியது.  அதைப் பார்த்த ஒரு மனிதன், ""மூடப் பறவையே, எதற்காக மரம் முழுவதையும் கொத்திக் கொண்டிருக்கிறாய்? இது வீண் வேலையல்லவா?'' என்று கேட்டான்.

அதற்கு அந்தப் பறவை, ""மனிதனே நான் என் உணவைத் தேடுகிறேன். தேடினால் கிடைக்கும்...'' என்றது.

அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தொடர்ந்து மரத்தைக் கொத்தி, மரத்தில் ஓட்டை போட்டு, அதற்குள் பதுங்கியிருந்த புழுக்களை எடுத்து உண்ண ஆரம்பித்தது.

தனது உணவைச் சாப்பிட்டு முடித்த பிறகு, அந்த மனிதனைப் பார்த்து, ""மனிதனே, நீயும் தேடு... மரத்திலும், மண்ணிலும், நீரிலும் ஏன் எல்லா இடங்களிலும் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும்'' என்றது.

கதையைச் சொல்லி முடித்த மகான், ""நீயும் இந்தப் பரந்த உலகத்தில் தேடு. உனக்கும் ஏதாவது கிடைக்கும். சோம்பேறியாக இருந்தால் வறுமைதான் கிட்டும்'' என்றார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வாழ்க்கைப் பயணம் - உழைப்பு


அமெரிக்க தொழிலதிபரான ராக்ஃபெல்லர், முதுமையிலும் கடுமையாக உழைத்தவர். ஒருமுறை, விமானத்தில் பயணித்தார். அப்போதும் ஏதோ வேலையாக இருந்தவரைக் கண்டு அருகில் இருந்த இளைஞர் வியப்புற்றார். அவர், ''ஐயா, இந்த வயதிலும் இப்படிக் கடுமையாக உழைக்கத்தான் வேண்டுமா? ஏகப்பட்ட சொத்து சேர்த்து விட்டீர்கள்... நிம்மதியாக சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே?!'' என்று ராக்ஃபெல்லரிடம் கேட்டார்.

 
உடனே ராக்ஃபெல்லர், ''விமானி இந்த விமானத்தை இப்போது நல்ல உயரத்தில் பறக்க வைத்து விட்டார். விமானமும் சுலபமாகப் பறக்கிறது. அதற்காக... இப்போது


எஞ்ஜினை அணைத்துவிட முடியுமா?

எஞ்ஜினை அணைத்துவிட்டால் என்னவாகும் தெரியுமா?'' என்று கேட்டார்.

''பெரும் விபத்து நேருமே!''- பதற்றத்துடன் பதிலளித்தான் இளைஞன்.

இதைக் கேட்டுப் புன்னகைத்த ராக்ஃபெல்லர், ''வாழ்க்கைப் பயணமும் இப்படித்தான். கடுமையாக உழைத்து உயரத்துக்கு வர வேண்டியுள்ளது. வந்த பிறகு, 'உயரத்தைத் தொட்டு விட்டோமே...' என்று உழைப்பதை நிறுத்தி விட்டால், தொழிலில் விபத்து ஏற்பட்டு விடும். உழைப்பு என்பது வருமானத்துக்காக மட்டுமல்ல, உடல் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதிக்காகவும்தான்!'' என்று விளக்கம் அளித்தார்.

நன்றி: கண்ணகி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனம் தளராதே | எறும்பு கதை

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நன்றி மறவா சிங்கம்

நாட்டில் அடிமைகளாக மக்கள் இருந்த காலம்.

ரோமாபுரியில் ஓர் அடிமை தன் முதலாளியை விட்டுத் தப்பிக் காட்டுக்குள் ஓடிவிட்டான். அவன் காட்டில் இருந்தபோது, ஒரு சிங்கம் நொண்டிக் கொண்டே அவன் பக்கத்தில் வந்து காலைத் தூக்கிக் காட்டியது.


அடிமை கொஞ்சமும் பயப்படாமல், அதன் காலைப் பிடித்துப் பார்த்தான். அதில் ஒரு முள் தைத்து இருந்தது. அதைப் பிடுங்கி, எறிந்து காலைத் தடவிக் கொடுத்தான். வலி நீங்கிய சிங்கம் காட்டுக்குள் ஓடி மறைந்தது.

சிறிது காலத்துக்குப் பிறகு, காட்டிலிருந்த அந்த அடிமையைப் பிடித்து, அக்கால வழக்கப்படி அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார்கள்.
ஒரு சிங்கத்தைப் பல நாட்கள் பட்டினி போட்டு, மரணதண்டனைக்குள்ளானவன் மீது அதை ஏவி விட்டு, அவனைக் கொல்வதுதான் அக்காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் முறையாக இருந்தது.

அதே போல, அந்த அடிமை மீது சிங்கத்தை ஏவினார்கள். சிங்கம் வேகமாக அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது. அவனருகில் வந்ததும் சற்றே தயங்கி நின்று அவனை உற்றுப் பார்த்தது.

முன்னொரு காலத்தில் தன் காலில் குத்திய முள்ளை எடுத்துவிட்டவன்தான் அவன் என்பதை அறிந்ததும், நாய் போல நின்று விட்டது. அடிமையும் அந்தச் சிங்கத்தை அடையாளம் கண்டுகொண்டு அதைத் தடவிக் கொடுத்தான்.
இந்தக் காட்சியைக் கண்டதும் அரசனும் அங்கு கூடியிருந்த மக்களும் ஆச்சரியப்பட்டனர்.

சிங்கம் ஏன் அவனை அடித்துக் கொல்லவில்லை என்ற விவரத்தை அந்த அடிமை எல்லோருக்கும் சொன்னான்.

இதைக் கேட்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த அரசன், அந்த அடிமையை விடுதலை செய்து, சிங்கத்தையும் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடுமாறு உத்தரவிட்டான்.

நன்றி: சிறுவர் மணி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.

அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார் என்றான் பரணி. எந்த சீனுடா? சும்மா கேட்டு வைத்தான் மாதவன். என் கிளாஸ்மேட்பா. புது கார்ல கோயிலுக்கு போனாங்களாம். ரொம்ப ஜாலியா இருந்துச்சுன்னு சீனு சொன்னான். நீயும் ஒரு கார் வாங்குப்பா.

வாங்கலாம். நாளைக்கே வாங்கணும். மகனை இழுத்து அணைத்து சொன்னான் மாதவன். கார் வாங்க நிறைய பணம் வேணும். இன்னும் அஞ்சு வருஷத்தில் சம்பாதிச்சுடுவேன். நீ ஹைஸ்கூல் போகும் போது உன்னை காரில் கொண்டு வந்து விடுவேன். சமத்து புள்ளையா விளையாடிட்டு வாப்பா.
துள்ளிக்குதித்து ஓடினான் பரணி.

நம்ம ரெண்டு பேருமே அந்தக் கூலி. அஞ்சு வருஷத்தில் கார் வாங்கிடுவேன்னு குழந்தைகிட்டே எதுக்கு பொய் சொன்னீங்க? மாதவனின் மனைவி கேட்டாள்

இப்போ அவனக்கு அஞ்சு வயது அஞ்சு வருஷம் போனா நம்ம பொருளாதார நிலைமை புரிய ஆரம்பிச்சுடும். அந்த பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களை திணிக்கவேண்டாம்.

நன்றி: இ-விகடன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வியாபார தந்திரம் | தமிழர் கதைகள்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்!' என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், 'ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!' என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, 'ஆறு பழங்கள் பத்து ரூபாய்' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இது விற்பனைக்கு அல்ல | உணர்வு

செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்குச் சென்றான் அந்தச் சிறுவன். பல அழகிய நாய்க்குட்டிகள் அங்கே விற்பனைக்கு இருந்தன. விலை 500 ரூபாய் என்றார் கடைக் காரர். கடையின் ஒரு மூலையில் நாய்க்குட்டி ஒன்று தனியாக இருப்பதைப் பார்த்தான் அவன்.



"இது மட்டும் ஏன் தனியாக இருக்கிறது? இது விற்பனைக்கு இல்லையா?'' என்று கேட்டான் சிறுவன்.

"இது உடற் குறைபாடுள்ள குட்டி. ஒரு கால் இல்லாமலேயே பிறந்தது. ஆகவே இது விற்பனைக்கு இல்லை'' என்றார் கடைக் காரர்.

அந்தக் குட்டியைத் தூக்கி விளையாடிய சிறுவன், தனது பையில் இருந்து 500 ரூபாயை எடுத்து நீட்டினான். "இந்தக் குட்டியை வாங்கிக் கொள்கிறேன்'' என்றான்.

"இது விற்பனைக்கு இல்லை என்று சொன்னேனே! நீ வேறு நல்ல குட்டியை வாங்கிக் கொள்ளலாமே. கால் ஊனமான இந்த நாய்க்குட்டியை ஏன் தேர்ந்தெடுத்தாய்?'' என்றார் கடைக்காரர்.

சிறுவன், தான் அணிந்திருந்த கால் சட்டையின் கீழ்ப் பகுதியைத் தூக்கிக் காட்டினான். அங்கு அவனுக்கு மரத்தாலான ஒரு கால் இருந்தது.

உடற் குறைபாடு உள்ள சிறுவன், தன்னைப் போலவே ஒரு கால் இல்லாமல் இருந்த நாய்க்குட்டியின் உணர்வுகளையும் துயரங்களையும் புரிந்து கொள்ளும் பெரிய மனம் படைத்திருந்தான் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

மற்றவரது இடத்தில் நம்மை வைத்து, அவர்களது பிரச்னைகளையும் துன்பங்களையும் புரிந்து கொள்ளும் மனமும் திறனும் நமக்கு வேண்டும். ஆங்கிலத்தில் இதை Empathy என்பர்.
 
நன்றி
இணைய விகடன் 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தந்திர நரியை வென்ற புத்திசாலி கழுதை

ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.


ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.

"நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல்". என உறுமியது ஓநாய்.

""ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும்  வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.

கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து,

ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.

கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

நன்றி: சிறுவர் பூங்கா

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நள்ளியும் புள்ளியும் | பாட்டிக் கதை

"அக்கா!, 

நல்லவன், புத்திசாலி இந்த இரண்டில் நான் எப்படி இருக்க வேண்டும்?"

பேரன் சந்தர் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கும் பேத்தி புவனாவைப் பார்த்துப் பார்வதிப் பாட்டி சிரித்துக் கொண்டே அன்றைய கதையைச் சொல்ல ஆரம்பித்தார். 
ஒரு காட்டில் ஆடு ஒன்றுக்கு இரண்டு குட்டிகள் இருந்தன. அவைகளுக்கு நள்ளி, புள்ளி என்று பெயரிட்டுச் செல்லமாக வளர்த்து வந்தது.  குட்டிகளும் வளர்ந்து சுயமாக வாழ வேண்டிய நேரம் வந்து விட்டது. எதிரிகளிடம் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கச் சொல்லித் தாய் ஆடு அனுப்பி வைத்தது. இரண்டும் தனித்தனியாக வீடுகள் கட்டிக் கொண்டு வாழ ஆரம்பித்தன.

நள்ளி இரக்க குணமுடைய அறிவாளி.. மற்றவர்களைக் கவரக்கூடிய பேச்சுத் திறமையும் அதற்கு இருந்தது. அன்பினால் கொடிய விலங்குகளையும் நண்பர்களாக்கி, காட்டில் யாரும் பயமில்லா வாழ்க்கை வாழ எண்ணியது. முதலில் அதனுடைய போதனையைச் சிறிய பிராணிகளிடம் ஆரம்பிக்க, நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனுடைய கனிவான அர்த்தமுள்ள சிந்தனையைத் தூண்டும் பேச்சுக்கள் அவைகளைக் கவர்ந்து இழுத்தன.

தினமும் நள்ளி வீட்டின் முன் உபதேசம் நடக்கும்.  நாளுக்கு நாள் பல புதிய பிராணிகள் சேர்ந்து கொண்டே இருந்தன. ஒரு நாள் பெரிய ஓநாய் ஒன்று அங்கு வந்தது. அதைப் பார்த்து மற்ற பிராணிகள் பயந்து நடுங்கின. நள்ளி தன் கவர்ச்சிப் பேச்சால் அவைகளுடைய பயத்தைப் போக்கியதுடன் ஓநாயைத் தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டது.. திருப்தியாகச் சாப்பிட்டு வந்த ஓநாய்க்குப் பசியில்லை. நள்ளியின் பேச்சை ரசித்துக் கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் முடிந்தவுடன் கைகுலுக்கி ஓநாயை அனுப்பி வைத்தது.

எப்பொழுது வேண்டுமானாலும் தாழ்ப்பாள் போடாத தன் வீட்டுக்கு வரச் சொன்னது..

இந்த அதிசயத்தைப் பார்த்த மற்ற பிராணிகள் நள்ளியைப் பாராட்டின. ஆனால் புத்திசாலியான புள்ளி அசைவ உணவால் வாழும் மிருகங்களின் ஆபத்தை எடுத்துக் கூறியது. ஆனால், நள்ளி அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அன்பு கலந்த உபதேசத்தால் கொடிய மிருகங்களின் உணவுப் பழக்கத்தையே மாற்றி விடப்போவதாகச் சொன்னது. 'கூரான கொம்புகள் உள்ள நமக்குப் பகலில் இந்த ஓநாயால் பயம் கிடையாது; இரவில் பாதுகாப்புக்காகக் கதவையாவது தாள் போட்டுக்ககொள்' என்று அது சொன்னதையும் அலட்சியம் செய்து விட்டது நள்ளி.

ஒரு நாள் ஓநாய்க்கு இரை கிடைக்கவில்லை. அலைந்து திரிந்ததால் அதற்கு அகோரப் பசி உண்டான போது நள்ளியின் நினைவு வந்தது. 'பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பது போல் அன்று இரவு எல்லோரும் தூங்கிய பின் நள்ளி வீட்டுக்குச் சென்றது. தாழ்ப்பாள் போடாத கதவைத் திறந்து உள்ளே சென்றபோது நள்ளி நன்றாக துங்கிக் கொண்டிருந்தது.

பாவம் நள்ளி, சிறிது நேரத்தில் ஓநாய்க்கு இரை ஆகிப்போனது..

நள்ளியின் அன்பும், அருளும், பண்பும், பாசமும், இரக்க குணமும் பயனில்லாமல் போய்விட்டன. அடுத்த நாள் புள்ளி நள்ளி வீட்டிற்கு வந்து அங்கிருந்த எலும்புகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தது. அதற்கு ஓநாய் மேல் சந்தேகம் வர, அதனால் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அறிவோடு சிந்தனை செய்ய ஆரம்பித்தது.

நள்ளியைச் சாப்பிட்ட ஓநாய்க்கு அதன் சுவை மிகவும் பிடித்திருந்தது. புள்ளியையும் கபளீகரம் செய்ய இரவில் அங்கு வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியாக இதைப் புள்ளி கவனித்தது. கதவு தாழ்ப்பாள் போட்டிருந்ததால் ஓநாய்க்கு உள்ளே போக முடியவில்லை. ஆனால் கதவைத் தள்ளிப் பார்ப்பதைப் பார்த்த புத்திசாலியான புள்ளி அதை ஒழித்துக் கட்ட ஒரு வழி கண்டுபிடித்தது.

மறு நாள் இரவு புள்ளி கதவைத் தாள் போடாமல் ஓநாய் நுழையும் இடத்தில் கருப்பான சுறுக்குக் கயிறை வைத்து அதன் மறு நுனியை ஜன்னல் கம்பியில் கட்டி வைத்தது. கதவைச் சிறிதாகத் திறந்து வைத்து வெளியே மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டது..

எப்பொழுதும் போல் ஓநாய் அன்றும் புள்ளி வீட்டுக்கு வந்தது. கதவு திறந்திருப்பதைப் பார்த்தவுடன் அதற்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. புள்ளியைக் கபளீகரம் செய்ய அவசரமாக உள்ளே நுழைந்தது. கறுப்பாக இருந்த சுருக்குக் கயிறு அதன் கண்ணில் படவில்லை. கழுத்து நன்றாக மாட்டிக் கொண்டு கயிறு இறுக்க ஆரம்பித்தது. பயந்துபோய் ஓநாய் துள்ளத் துள்ள, கழுத்தில் இறுக்கம் அதிகமாகி விட்டது. குரல்வளை நசுங்கி மூச்சுத் திணறி இறந்து போனது.. அன்றிலிருந்து ஓநாய் பயமில்லாமல் மகிழ்ச்சியாகப் புள்ளி வாழ்ந்தது.

நள்ளியின் அன்பு அதைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடப் பயன் படவில்லை. ஆனால், புள்ளிக்கு அதனுடைய புத்திசாலித்தனம் உதவியது. அதனால் புத்திசாலித்தனத்தோடு அன்பு இருந்தால்தான் நாமும் வாழலாம்; மற்றவர்களையும் திருத்தி வாழ வைக்க முடியும்.

கதையை கவனமாக கேட்ட சந்தர் புத்திசாலியாக இருப்பதோடு நல்லவனாகவும் இருக்கப் போவதாகச் சொன்னான். புவனாவும் அதை ஆமோதிக், பாட்டி அவர்களை அணைத்து உச்சி முகர்ந்தாள். அன்பு ஸ்பரிசம் அனைவரையும் விரைவில் ஆனந்தமாகத் தூங்க வைத்தது.

நன்றி: மாத்தியோசி.காம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முக்கியம்

ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் "கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே...உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே..." என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.
 

அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி, "நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும்தான் கேட்க வேண்டும்." என்றார்.

பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.

"ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்."

இந்த வரத்தில் பார்வை இல்லாதவன் , தனக்குப் பார்வை வேண்டும், ராஜயோக வாழ்க்கை வாழ வேண்டும், நூறாண்டு வாழ வேண்டும், ஏழு மாடி வீடு வேண்டும் என்பதயெல்லாம் ஒரே வரத்தில் கேட்டு விட்டான்.

அவனுடைய புத்திசாலித்தனமான பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.

புத்திசாலித்தனம் வாழ்க்கையில் முன்னேற முக்கியம் என்பது உண்மைதானே?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குயில் அக்கா | காக்கா அண்ணன் | ஆந்தையார்

கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணி பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன.


ஒரு நாள், ""அம்மா எல்லாரும் பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும் வேளையில் ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இது ஏன்?'' என்றது.

""நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் தெரியும். அத னால் தான் நாம் பகலெல்லாம் துõங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம்,'' என்றது தாய் ஆந்தை.


""ஏனம்மா கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்துவிட்டார்?'' என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு.

""கடவுள் நம்மையெல்லாம் ஒரே மாதிரிதான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றது தாய் ஆந்தை.

""அப்படி என்ன தவறு செய்தார்?'' என்று கேட்டன குஞ்சுகள்.

""ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. எனவே, அதை அழைத்து கொண்டு காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் சென்றனர்.

""குயில் டாக்டரோ நன்றாக வைத்தியம் பார்த்து காக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. எனவே, குயில் டாக்டர் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டது.

""இவர்கள் இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். ஏதுடா தொல்லையாப்போச்சு என்று நினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும் இரையை பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார்.

""பகல் முழுவதும் மரப் பொந்துகளில் படுத்து நன்கு துõங்குவது... இரவில் எழுந்து வெளியே செல்வது... இப்படியே இருந்ததால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை குயில் டாக்டரால். அதனால் ஆத்திரமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டியிருக்கிறது.

""அந்த திருட்டு காக்கா கடுமையாக வேலை செய்தாவது டாக்டர் பீசை கொடுத்திருக்க வேண்டியதுதானே... அப்படி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குயில் டாக்டர், இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

""அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது.

""நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் கதை,'' என்றது தாய் ஆந்தை.

""அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,'' என்றனர்.

செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.

 நன்றி:வலைத்தமிழ்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யார் உண்மையான பக்தன்


ஒரு நாள் இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. உண்மையான பக்தி உடையவன் யார் என்பது தான் அது' நேராக இறைவனிடம் சென்று தங்கள் சந்தேகத்தை கேட்டன.

அப்போது இறைவன், "தேவதைகளே! இந்த ஊரில் போய் யார் எனது உண்மையான பக்தன் என்பதை விசாரித்து வாருங்கள்" என்றார்.
உடனே தேவதைகள் புறப்பட்டு பலரிடமும் சென்று விசாரித்தன.

ஒருவன், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றான்.

அடுத்தவன், "நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவில் போவேன்," என்றான்.

மற்றவன், "நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்," என்றான்.

இன்னொருவன், "எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்," என்றான்.

இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.

அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, "அய்யனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.

அதற்கு அவன், "எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.

தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.
எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.

"தேவனே... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று கேட்டன.

"கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.

"யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதை கள்.

கடவுள் புன்னகைத்தபடியே, "இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.

உண்மை புரிந்தது தேவதைகளுக்கு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மனதைப் புரிந்து கொள் | மகிழ்ச்சியாக வாழ்

ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன்.


Tamil Arivu Kadhaikal

“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.

“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான்

“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்” என்றார் பெரிவர்

“அப்படியா சொல்கிறீர்கள்?“

“ஆமாம்!”

“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”

“மனதைப் புரிந்து கொள்... அது போதும்.”

“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.

"இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் -

“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை; வருந்தமும் இல்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை... துன்பமுமில்லை...” - endru அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

நன்றி : உள்ளமே உலகம் - தென்கச்சி கோ.சுவாமிநாதன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பிஞ்சு மூளையில் உதித்த அறிவு | அறிவின் அறியாமை

ஒரு பள்ளி ஆசிரியர் வண்ணப் புத்தகத்தில் யானையின் படத்தை வரைந்து கொண்டு வந்து, அதை சுட்டிக் காட்டி “இது என்ன?” என்று மாணவர்களைக் கேட்டார்.
 
 சின்னக் குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியான குரலில் “யானை!”, “யானை!” என்றார்கள். அவர்களை பாராட்டி விட்டு அடுத்த வகுப்பை நோக்கிச் சென்றார். அங்கு ஒரு சின்ன குழந்தையின் அறிவு ஆசிரியரின் அறிவை அறியாமையாக்கியது.

ஒரே ஒரு சின்ன குழந்தை எழுந்து, “ஐயா, அது யானை அல்ல… யானையின் படம் என்றது”. ஐம்பது வயது மூளை அப்படியே அமைதியாகி போனது! உண்மை தானே. பிஞ்சு மூளையில் உதித்த அறிவு தமது அறியாமையை ஆசிரியருக்கு உணர்த்தியது.

“படிப்பாலும் கல்வியறிவாலும் வருகிற அகங்காரம் இருக்கிறதே அது அழியாது! இந்த அறிவு வெறும் அறியாமை என்று அடுத்தவர் அறிவால் அடிவாங்கினால் ஒழிய, இது ஒழியாது”.

ஆகையால் நாம் இந்த‌ துன்ப‌த்திற்கு ஆளாகாம‌ல் அகங்கார‌ம் இன்றி வாழ்ந்திடுவோம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யானைக்கு வந்த திருமண ஆசை

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.


இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.

தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

அவர்கள் முல்லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி " நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்" என்றார்.

ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்" என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.

நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.

செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.

முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார்.

"என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?" என்று கோபத்துடன் கேட்டார். முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி " மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. 

மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் " என்றார்.

என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?" என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.

மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.

மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.

வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.

மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார்.

முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிறுவனின் தன்னம்பிக்கை

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன  நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 

சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நூலகம் சிறப்பு கதை - அச்சுவும், சச்சுவும் | சிந்தனை கதை

அச்சுவும், சச்சுவும்  வேலை தேடித் தேடி அலுத்துப்போனார்கள். இருவரும் உள்ளூர் நாலகத்தில் சந்தித்தபோது, சொந்தமா நகல் (ஜெராக்ஸ்) எடுக்கும் கடை வைப்பது பற்றியும் . நீ பாதி பணம் போடறதா இருந்தா உன்னையும் பங்குதாரா சேர்த்துக்கறேன்” என்றும் கூறினான் அச்சு.


சரி என்றான் சச்சு.

ஆச்சு ஆர்வத்துடன் ஒரு வார இதழை எடுத்து அதில் வந்திருந்த நகல் இயந்திர (ஜெராக்ஸ் மிஷின்) விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரத்தைக் காட்டினான்.

அந்தக் கம்பெனியின் விலாசத்தை எழுத பேனாவை எடுத்தான் சச்சு.

அதற்குள் அச்சு சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விளம்பரம் வந்த பக்கத்தை அப்படியே கிழித்து பாக்கெட்டில் திணித்துக் கொண்டான்.

”வா, வெளியே போய் பேசலாம்” என்றான் அச்சு

சச்சுக்குவுக்கு  மனசு உறுத்தியது. பலர் படிக்க வேண்டிய நூலகப் புத்தகத்தில் இருந்து அக்கறை இன்றி கிழிக்கிறானே, இவனை நம்பி பணம் போட்டு பங்குதாரராய் சேர்ந்தால்…?

வெளியே வந்த்தும், ”மன்னிக்கவும், நான் பங்குதாரராய் சேரலை” என்றான் சச்சு.

கவனிக்க
அச்சுவை போல் நூலகத்தில் உள்ள நூல்களில் ஏடுகளை கிழிக்காதீர்: இன்று உங்களுக்கு பயன்பட்டது போல் வரும் காலங்களில் எல்லோருக்கும் பயன்பட தேவை அந்த புத்தகங்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அறிவாளியும் முட்டளாவான்..!

தியானமும் தூக்கமும்

மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ''அரை மணி நேரம் தியானம் செய்தால் ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்றார்.
சட்டென்று எழுந்த மாணவன் ஒருவன், ''அப்படியெனில், ஆறு மணி நேரம் தூங்கினால் அரை மணி நேரம் தியானம் செய்வதற்குச் சமமா?'' என்று கேட்டான்.

சுவாமி விவேகானந்தர் புன்னகையுடன் பதிலளித்தார்...

''முட்டாள் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அறிவாளி ஒருவன் தூங்கத் துவங்கினால் முட்டாளாகி விடுவான்!''

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி

ஓட்டலில் கண்காணிப்பாளர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

அண்டா தேய்ப்பது, மின்சாரம் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று நிறைய கடினமான வேலை கொடுப்பார்.

அந்நேரம் அங்கு வந்த சர்வர் கோபு கேட்டான்: “ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு  இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’

அழகேசன் பதில் கூறினான்: “கோபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் சம்பளம் இல்லாமல் சாப்பாடு மட்டும் கொடுத்தா போதும் என்று இவனை வேலைக்குச் சேர்த்து கொண்டார் . வேலை எளிதாக  இருந்து வாய்க்கு ருசியா சாப்பாடும் கிடைச்சா இங்கேயே இவன் எதிர்காலம் வீணாப் போயிடும்.

நான் நான் கொடுக்குற கடின வேலையால “படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி’ன்னு இன்னும் ஒரு  வாரத்துல ஓடிடுவான் பாரு.’

அரக்கனாய் கோபுவின் கண்ணுக்குத் தெரிந்த அழகேசன் மனம் அழகாய் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் கோபு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காட்டாறு எங்கே போகுது! புத்திசாலி மகன்

ஒரு மூங்கில் வெட்டுபவர் ஒரு நாள் தனது பத்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு மூங்கில் வெட்டச் சென்றார்.

பையனோ விடாமல் வழியெல்லாம் அவரைக் கேள்விகளால் துளைத்தெடுத்துக் கொண்டே வந்தான். அவரும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வந்தார்.


மூங்கிலை வெட்ட ஆரம்பித்தார். பையன் அப்போதும் கேள்விகள் கேட்டான். “”நாம அப்புறம் பேசிக் கொள்ளலாம். நீ நல்ல பையனாம். அப்பா வெட்டுற மூங்கிலை எல்லாம் எடுத்து அடுக்கி வைப்பியாம்” பையனும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

அவர் மூங்கில் வெட்ட ஆரம்பித்தார். “”அப்பா…அப்பா… ” என்றான் பையன். “”என்னடா?” கோபத்துடன் கேட்டார். “இந்தக் காட்டாறு எங்கே போகுது?” “”நம்ம வீட்டுக்குத்தான்”

பையன் அதற்குப் பிறகு கேள்விகள் கேட்கவில்லை. மாலை நேரம் ஆனது. மூங்கில் வெட்டுபவர் பையனின் கையைப் பிடித்துக் கொண்டு “”வா, போகலாம். நான் வெட்டிய மூங்கிலையெல்லாம் எங்கே அடுக்கி வைச்சிருக்க?” என்று கேட்டார்.

பையன் சொன்னான்: “”நீங்க வெட்டினதை எல்லாம் ஆற்றிலே போட்டுட்டேன்.  இந்நேரம்  அது நம்ம வீட்டுக்குப் போயிருக்கும்..!’ ன்னும் பொறுமையா பதில் சொன்னான் செல்ல மகன்


இளம் வயது குழந்தைகளுக்கு சொல்லுவதை திருந்த சொல்லுங்கள். சரியாக சொல்லுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வேலைக்காரனின் சீரிய சிந்தனை | நகைசுவை கதை

ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து,
குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.


இரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால்  தூக்கம் வராது என்றார். 

அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார். அவனும்,'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.

நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.' 

அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து  பார்த்த போது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப்
பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார். 

அவன் சொன்னான்,'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது  யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மாற்ற வேண்டியது உலகை அல்ல உங்களை

இது வெறு‌ம் கதைய‌ல்ல. ந‌ம் வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தேவையான ஒரு தகவ‌ல்.
 
நிறைய பே‌ர் உலக‌ம் இ‌ப்படி இரு‌க்‌கிறதே, ம‌னித‌ர்க‌ள் இ‌ப்படி இரு‌க்‌கிறா‌ர்களே எ‌ன்று புல‌ம்புவா‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் எ‌ப்போதுதா‌ன் மாறுவா‌ர்களோ, இவ‌ர்க‌ள் எ‌ப்படி‌த்தா‌ன் ‌திரு‌ந்துவா‌ர்களோ எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். ஆனா‌ல் உல‌க‌த்தை மா‌ற்ற முய‌ற்‌சி‌ப்பதை ‌விட, ந‌ம்மை மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள மு‌ய‌‌ற்‌சி‌ப்பதுதா‌ன் ‌சிற‌ந்தது.
இத‌ற்கு உதாரணமாக ஒரு கதை:

ஒரு கால‌த்‌தி‌ல் ம‌ங்கலாபு‌ரி எ‌ன்ற நகர‌த்தை ஒரு ம‌ன்ன‌ன் ஆ‌ண்டு வ‌ந்தா‌ன். அவ‌ன், ஒரு நா‌ள் வெகு தொலை‌வி‌ல் உ‌ள்ள பகு‌திகளு‌க்கு சு‌ற்றுலா செ‌ன்றா‌ன். அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வாகன‌ங்க‌ள் ஏது‌ம் இ‌ல்லாததா‌ல் பல இட‌ங்களு‌க்கு நட‌ந்தே செ‌ல்ல வே‌ண்டியதா‌‌யி‌ற்று.

தனது பயண‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு அர‌ண்மனை‌க்கு வ‌ந்த ‌ம‌ன்ன‌ன், த‌ன் கா‌ல்க‌ளி‌ல் கடுமையான வ‌லியை உண‌ர்‌ந்தா‌ன். இதுதா‌ன் அவ‌ன் அ‌திகமான தூர‌ம் நட‌ந்து செ‌ன்ற முத‌ல் பயணம் எ‌ன்பதாலு‌ம், அவ‌ன் செ‌ன்று வ‌ந்த பகு‌‌திக‌ள் பல கரடுமுரடாக இரு‌ந்ததா‌லு‌ம் கா‌ல்வ‌லியை அவனா‌ல் தா‌ங்கவே முடிய‌வி‌ல்லை.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல், ம‌ன்ன‌ன் ஒரு ஆணை‌யி‌ட்டா‌ன். அதாவது, "இ‌ந்த நகர‌ம் முழுவது‌ம் உ‌ள்ள அனை‌த்து சாலைகளையு‌ம் ‌வில‌ங்‌கி‌ன் தோலை‌ கொ‌ண்டு பர‌ப்‌பி ‌விட வே‌ண்டு‌ம்" எ‌ன்பதாகு‌ம்.

இ‌தனை ‌நிறைவே‌ற்றுவத‌ற்கு ஏராளமான ‌வில‌ங்குகளை கொ‌ல்ல வே‌ண்டி வரு‌ம், மேலு‌ம் இத‌ற்கு ஏராளமான பண‌ம் செலவாகு‌‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம்.

இதனை உண‌ர்‌ந்த ம‌ன்ன‌னி‌ன் ப‌ணியாள‌ர் ஒருவ‌ர், ‌மிகு‌ந்த ப‌ணிவுட‌ன் ம‌ன்ன‌னிட‌ம் செ‌ன்று, ‌நீ‌ங்க‌ள் கூ‌றியபடி, நகர‌ம் முழுவதையு‌ம் தோலா‌ல் பர‌ப்‌பினா‌ல் ஏராளமான பொரு‌ட்செலவாகு‌ம். உ‌ங்க‌ள் ஒருவரு‌க்காக இ‌ப்படி நகர‌த்தையே மா‌ற்றுவது தேவை‌யி‌ல்லாத செல‌வின‌ம். அத‌ற்கு ப‌திலாக ‌நீ‌ங்க‌ள் ‌‌மிகவும ‌‌மிருதுவான ஒரு தோலை‌க் கொ‌ண்டு கால‌ணி செ‌ய்து கொ‌ள்ளலாமே எ‌ன்று ஆலோசனை‌க் கூ‌றினா‌ன்.

ஆ‌ச்ச‌ரிய‌த்‌தி‌ல் மூ‌ழ்‌‌கிய ம‌ன்ன‌ன், இறு‌தியாக தனது ப‌ணியாள‌ரி‌ன் ஆலோசனையை ஏ‌ற்று‌க் கொ‌ண்டு தன‌க்காக ஒரு கால‌ணியை தயா‌ரி‌க்க சொ‌ன்னா‌ன்.

இது வெறு‌ம் கதைய‌ல்ல. ந‌ம் வா‌ழ்‌க்கை‌க்கு‌த் தேவையான ஒரு தகவ‌ல். அதாவது, இ‌ந்த பூ‌மியை ‌மிகவு‌ம் ம‌கி‌ழ்‌ச்‌சியான உலகமாக நா‌ம் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள முடியு‌ம், அத‌ற்காக நா‌ம் ந‌‌ம்மை‌த்தா‌ன் மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டுமே‌த் த‌விர, இ‌ந்த உலக‌த்தை அ‌ல்ல எ‌ன்பதுதா‌ன் அது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

குரங்கு வாங்கி கொடுத்த தண்டனை

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுத்து  எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் கொடுத்தார்கள்


"குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்" என்றனர் சீடர்கள்.

பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.
அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு....

அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.

பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.

"குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!" என்றான் மண்டு.

பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.

"இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தான் மட்டி.

மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.

"வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!" என்று புறப்பட்டார், பரமார்த்தர்.

தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.

அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதக்கப்பட்டது.

"குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!" என்று புலம்பினார்கள் சீடர்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சிட்டு குருவியும் குட்டி யானையும்

”ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு,  தினமும் காட்டுல நடந்துக்கிட்டே தும்பிக்கைக்கு எட்டுகிற மரக் கிளைகளை ஒடிச்சு சாப்பிட்டுக்கிட்டே போகும். அப்படி ஒரு நாள் ஒரு மரத்தை நெருங்கினப்ப, அங்கே இருந்த சிட்டுக்குருவி கையை ஆட்டி, ‘வணக்கம் யானை நண்பா’ என்று கூறியது”

 

அதை கேட்ட யானைக்குட்டி அலட்சியமாக சொன்னது
‘உன்னோட உருவம் எவ்வளவு? என்னோட உருவம்  எவ்வளவு? நாம எப்படி நண்பர்களா இருக்க முடியும்?”

உடனே குருவி பதில் சொன்னது’

‘ஏன் முடியாது. நட்புக்கு உருவம் முக்கியம் இல்லை. மனசு தான் முக்கியம், நான் இந்த மரத்தில்  ரொம்ப நாட்களாக இருக்கேன். நீ இதை ஒடிச்சேன்னா, நானும் இங்கே இருக்கிற மற்ற பறவைகளும் எங்கே போவது? ” என்று கேட்டது.

”அதுக்கு யானை கேலியான குரலில் சொன்னது,
இந்த மரம் உங்களுக்கு வேணும்னா வீடா இருக்கலாம் ஆனா எனக்கு இது தான் சாப்பாடு” என்றது

அதைக்கேட்ட குருவி சொன்னது

”அப்படின்னா நமக்குள்ளே ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாம். அதில் நீங்கள் வெற்றி அடைந்தாள் , இந்த மரத்தின் கிளைகளை உடைத்து சாப்பிட்டுகொள்  நான் வெற்றி அடைந்தாள்  மரத்தை ஒடிக்க்கூடாது’ என்றது சிட்டுக்குருவி.

‘பொடிப் பயல் உன்னோடு போட்டியா? சரி சொல்லு’ என்றது யானைக் குட்டி.

”நாம ரெண்டு பேரும் அந்த மலை வரைக்கும் பறக்கணும். யார் முதலில் அங்கே போய்ச் சேர்கிறோமோ, அவங்கதான் வெற்றி அடைந்த மாதிரி” என்றது சிட்டுக்குருவி.

யானை தன்னாலே பறக்க முடியாதுனு தெரிஞ்சாலும் வீம்புக்காக இவ்வளவு தானா பறந்துட்டா போகுது என்று போட்டிக்கு ஒப்புக் கொண்டது

போட்டி ஞாயிற்றுகிழமை காலை நடைபெறும் என்று நாள் முடிவு செய்யப்பட்டது, இப்போ யானைக்கு ஒரு பிரச்சனை, நாலு நாளைக்குள்ளே எப்படியாவது பறக்க கற்றுக் கொள்ள வேண்டும், என்ன செய்வது, யாரிடம் கற்றுக் கொள்வது என குழம்பியது

பறக்கிறது என்பது பெரிய விஷயமா என்ன, லேசாக கத்துக் கொள்ளலாம் என்று நினைத்த யானை வழியிலே ஒரு கோழியை பார்த்தது

”கோழி கோழி, எனக்கு ஒரு உதவி செய்யணும்,  நான் எப்படியாவது பறக்கணும். அதுக்கு ஒரு வழி சொல்லு” என்றது.

அதைக்கேட்ட கோழி சொன்னது ”அது ரொம்ப சுலபம் அண்ணே. நான் என்ன செய்றேன்னு கவனி! அதே மாதிரி செய்தேன்னா நீயும் பறக்கலாம்” என்றது.
யானையும் ஒத்துக் கொண்டது

கோழி அங்கே இருந்த ஒரு பாறை மேலே ஏறி நின்னுகிட்டு சடசடனு. இறக்கை அடித்தபடியே தாவியது,  சில நொடிகள் அந்தரத்தில் பறந்தவாறு கீழே வந்து சேர்ந்துச்சு. ‘இவ்வளவு தான், சுலபம், எங்கே நீ பற பாக்கலாம்’ என்றது.

யானையும் கஷ்டப்பட்டு பாறை மீது ஏறி நின்று கோழி மாதிரி காலை விரிச்சிகிட்டு தாவியது,  அவ்வளவு தான், தொபுக்கடீர்னு கீழே விழுந்து நல்ல அடி, தொப்பை கலங்கி போச்சு,


.யம்மா, யப்பானு கத்திகிட்டே டேய் பறக்குறதுக்கு வழி கேட்டா இடுப்பை முறிக்குறதுக்கு வழி சொல்றேனு சொல்லிகிட்டே எழுந்து நின்னுச்சி,


எங்கே யானை தன்னை அடித்துவிடுமோ என்று  பயந்து போன கோழி ஒரே ஓட்டமா ஓடிப்போனது.


யானை வலியோடு சே, அவசரப்பட்டு போட்டிக்கு ஒப்புக்கிட்டோமோ? , சிட்டுக் குருவியிடம் தோற்கக் கூடாது. எப்படியும் ஜெயிச்சுடணும்’னு நினைச்சது.


அப்போ, அந்தப் பக்கமாக ஒரு காகம் பறந்து வந்தது. அதை நிறுத்திய யானை, விஷயத்தைச் சொல்லிச்சு. யானையை மேலே இருந்து கீழே வரைக்கும் பார்த்த காகம், ‘உன்னோட வெயிட்தாண்ணே பிரச்னையே. நாலு நாள் சாப்பிடமா கிடந்தால் நல்லாப் பறக்கலாம்’ என்று சொல்லிவிட்டுப் பறந்துபோச்சு.”


யானை எதுவும் சாப்பிடாமல் பட்டினிகிடந்து நாலு நாள்ல வாடி வதங்கிப் போச்சு, எழுந்து நிக்கவே முடியலை, சரி எப்படியாவது பறந்து பாக்கலாம்னு தாவினா கண்ணை கட்டிகிட்டு மயக்கம் வந்து விழுந்திருச்சி,

காக்கா பக்கத்தில வந்து உட்கார்ந்து இதுக்கே உன்னாலே தாங்க முடியலையா, அப்போ நீ பறந்த மாதிரி தானு கேலி செய்தது

அதைக்கேட்ட யானை கோபத்தில அடிக்க தும்பிக்கையை சுழற்றியதும் காக்கா பறந்து போய்கிட்டே, உன்னாலே என்னை ஒண்ணும் பண்ண முடியாது, எனக்கு ரெக்கை இருக்கு, உனக்கு ரெக்கையில்லைனு சொல்லிச்சி,
யானைக்கு கோபம் அதிகமாகி கத்தியது,

அதைக்கேட்ட கழுகு கிட்டே வந்து சொன்னது,

‘ ஏன் அண்ணே கோபபடுறே, பறக்கிறது சாதாரண விஷயம் தான், அதுக்கு நீ என்ன செய்யணும்னா, அதோ தெரியுதே உயரமான மலை, அது மேலே ஏறு. உச்சிக்குப் போனதும், அங்கே இருந்து நான் பறக்கணும்னு சொல்லிகிட்டே கண்ணை மூடிக்கிட்டு குதி, தானா பறந்துடுவே  என்றது.

யானைக்கு அப்படி குதித்தால் பறக்கமுடியுமா என்று தயக்கமாக இருந்த்து, கழுகு சொன்னது

என்னை நம்புனா, உடனே நீ பறந்துடலாம் என்றது

யானை மூச்சுவாங்க மலை மேல ஏற ஆரம்பிச்சது, உச்சிக்கு போறதுக்கு முன்னாடி மூச்சு தள்ளிப்போச்சி, அங்கேயிருந்து கிழே பார்த்தா அவ்வளவு பெரிய காடு மரம் எல்லாம் குட்டியா தெரியுது, கண்ணை மூடிகிட்டு கிழே குதிக்க எட்டி பார்த்தா தலை சுத்துச்சி, வேற வழியில்லை என்று குதிக்க போகும் போது குருவி பறந்து வந்து சொன்னது

யானை அண்ணே, இங்கே இருந்து குதிச்சா நீங்க காலி, இவ்வளவு உயரத்துல இருந்து பாருங்க காடுங்கிறது எவ்வளவு அழகா இருக்கு, இதுக்குள்ளே ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு, இதுல யாருமே பெரிய ஆளும் இல்லை, யாரும் சின்ன ஆளும் இல்லை, 

இந்த காடு மனுசன் உண்டாக்கினது இல்லே, காலம் காலமாக இருந்துகிட்டே வர்ற இயற்கை, உங்களாலே பறக்க முடியாது, என்னால சின்ன கல்லைக் கூட தூக்க முடியாது, அவங்க அவங்க பலம் திறமை அவங்களுக்கு, இப்போ கூட ஒண்ணும் ஆகிடலை, நாம நட்பாக இருக்கிறதா இருந்தா போட்டியே வேண்டாம் என்றது

யானை யோசித்துப் பார்த்தது,

குருவி சொல்றது சரி தான், நம்மாலே பறக்கமுடியாது, குருவியாலே மரத்தை தூக்கமுடியாது, நாம ஏன் தேவையில்லாமல் அது கூட போட்டி போடணும்னு நினைச்சது, சே நான் தான் பெரிய ஆளுனு திமிரா நடந்துகிட்டேன், நாம இனிமே நண்பர்கள் ஆகிறலாம்னு சொல்லிச்சி குருவியும் அதை ஏத்துகிடுச்சி,
அன்று முதல் யானையும் சிட்டுக் குருவியும் காட்ல நண்பர்களாக இருந்தார்கள்.

நாம எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், நம்மால முடியாத ஒரு விஷயம், இன்னொருவரால் லேசாக செய்ய முடியும். அதனால், யாரையுமே நாம அலட்சியமா நினைக்கக் கூடாது. எல்லோர் கிட்டேயும் அன்பாகவும் நட்பாகவும் நடந்துக்கணும்

நன்றி, எஸ் ராமகிருஷ்ணன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

திருட்டுத் தொழில் | குரங்கின் பலே பட்டாசு !

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் தம்முடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார்.


 "குருதேவா! திருட்டுத் தொழில் செய்தால் என்ன?" என்று கேட்டான், மட்டி

"மாட்டிக் கொண்டால் உதைப்பார்களோ!" என்றான் மடையன்.

"அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் தரலாம்!" என்று யோசனை கூறினான், முட்டாள்.

"ஆகா! அருமையான திட்டம்தான். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது?" என்று கேட்டார், பரமார்த்தர்.

"பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன?" எனக் கேட்டான், மண்டு.

"நமக்குக் குரங்கு வேண்டும் என்றால், முதலில் பிள்ளையாரைப் பிடிக்க வேண்டும். பிறகு அது தானாகவே குரங்காக ஆகிவிடும்" என்று விளக்கம் சொன்னான், மூடன்.

"இதுவும் சரிதான். ஆகவே, இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், வாருங்கள்" என்றபடி புறப்பட்டார் பரமார்த்தர். சீடர்களும் அவருடன் சென்றனர்.

அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டார் குரு. "சீடர்களே, இப்பொழுது பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் சப்தம் போடாமல் மெதுவாகச் சென்று, "லபக்" என்று பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று கட்டளையிட்டார், பரமார்த்தர்.

சீடர்களும் மரத்தைச் சுற்றி வந்து பிள்ளையார் சிலை மேல் விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.

அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது. அதைக் கண்ட பரமார்த்தர், "சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்!" என்று கத்தினார்.

மட்டியும் மடையனும் வேகமாகத் துரத்திச் சென்று அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர். அதைக் கண்ட பரமார்த்தர், இது சாதாரணமான குரங்கு அல்ல. இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்!" என்று சொன்னபடி அதன் கால்களில் விழுந்து வணங்கினார்.

சீடர்களும், "ரங்கா, ரங்கா!" என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.
மடத்துக்கு வந்து சேர்ந்ததும், "நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால் அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை. அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு வரும்படிக் குரங்கை அனுப்புவோம்" என்றான் மட்டி.

"குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!" என்று அதை ஏவி விட்டான் முட்டாள்.
அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன.

வாணக் கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.

அதைக் கண்ட மடையன், "சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!" என்று மகிழ்ந்தான்.

"ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!" என்றான், முட்டாள்
பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, "நம் குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் புராவும் கருப்பு நிறம் தான். நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் இருக்கின்றன" என்று பெருமைப்பட்டுக் கொண்டான் மண்டு.

பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன், "நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த சாதி சுருட்டு" என்றான்.

சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக் கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு வைத்தான், முட்டாள்.
ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர் சீடர்கள்.
அடுத்த கணம், "டமால், டுமீல்" என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது.

வாய் இழந்த சீடர்கள், "ஐயோ, ஆஞ்சநேயா!" என்று அலறிக் கொண்டு உருண்டனர்.

நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், "இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்" என்று எச்சரிக்கை செய்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

துன்பத்தை உதறித் தள்ளு

ரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார்.அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது.அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப் பட்டது.நடக்கவும் சிரமப் பட்டது.ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார்.கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர்.

ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்ல்லை.ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது.
தன் மீதும் விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.
மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர்.தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்து விட்டது.

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான்.

மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம்.அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

நன்றி: அரும்புகள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முரட்டுக் குதிரை

சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.


ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.

குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.

அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.

"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பிரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.

இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கழுதையிடம் கற்றுகொள்!

ஒரு ஞானி இருந்தார்

குடும்ப வாழ்க்கை வாழ்க்கை மேற்கொண்ட ஒருவர் அவரிடம் வந்தார் 
தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்...!



உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு  அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார்

தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும்  மாலையில் திரும்பும்போதும் அதனை கவனிக்கும் படியும் கூறினார் 

மறுதினம் பொழுது புலர்ந்தது குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார் சலவை தொழிலாளி அழுக்கு  பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.

மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் கலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லையே எனக் கூறினான்.

"அன்பனே குடும்பஸ்தானே!.... காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது "அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் இல்லை."  அதே போல் மாலையில்  "சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை" துன்பம் வரும்போது அதிகள் துன்பம்மின்மையும் இன்பம்  வரும்போது அதிக சந்தோசம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான  மனதுடன் என்று கொள்ள வேண்டும். இதுவே சிறந்த தானம்.

இந்த செய்தியையே அந்த கழுதைகள் மூலம் தரும் ஞானம் என்றார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பயம் பாதி கொல்லும்!

ஒரு காட்டில் முனிவர் தவம் இருந்தான், அப்போது அந்த வழியக் ஒரு நோய் போய்க்கொண்டிருந்தது அதன் பெயர் காலரா...!

முனிவர் நோயை கூப்பிட்டு எங்கே போகிறாய் என கேட்டார்,

தமிழ் அறிவு கதைகள்
பக்கத்து ஊரில் திருவிழா நான் அங்கு சென்று எல்லாருக்கும் காலராவை
பரப்பி விட்டு காலராவினால் கொல்லபோகிறேன் என்றது.

இது பாவம் இல்லையா என முனிவர் கேட்க, அப்புறம் ஏன் என்னை இறைவன் படிக்கவேண்டும் என நோய் கேட்டது

சரி என்று கூறிவிட்டு வெறும் 100 பேரை மட்டும் கொல், அதற்க்கு மேல் உயிர்பலி ஏற்பட்டால் ஏன் சாபத்திற்கு ஆள்வாய் என முனிவர் கூறி அனுப்பினார்

ஆனால்  காலராவினால் உயிர் பலி 2000 ஆக உயர்ந்துவிட்டது.

முனிவருக்கு கோபம், நோயை அழைத்து ஏன் இப்படி செய்தாய் ஏன் கேட்டார்!

நான் கொன்றது 100  பேர் தான் மற்றவர்கள் அனைவரும் பயத்தினால் இறந்தவர்கள்!! நான் என்ன செய்யமுடியும் முனிவரே!...!

பயம் பாதி கொல்லும்! 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.

மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும்,  நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தன்னுடைய மதிப்பை மாற்றி கொள்ளாமல் தக்கவைத்து கொள்

ஒரு மேடைபேச்சாளர் தன்னுடைய சட்டைபையிலிருந்து ஒரு 500 ரூபாய் தாளை எடுத்து இது என்ன என பார்வையாளர்களை பார்த்து கேட்டார் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள் பின்னர் அதனை தரையில் கசக்கி வீசி எறிந்தபின் அதுஎன்ன என கேட்டார் அப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள் பிறகு அதன்மீது ஒரு முத்திரையை குத்தி இப்போது இது என்னவென கேட்டார் இப்போதும் அனைவரும் இது ஒரு 500 ரூபாய் தாள் என கூறினார்கள் 

உடன் அம்மேடை பேச்சாளர் பார்த்தீர்களா ஒரு 500 ரூபாய்தாளானது நாம் என்ன செய்தாளும் அது தன்னுடைய மதிப்பை மாற்றி கொள்ளாமல் தக்கவைத்து கொண்டுள்ளது அவ்வாறே நாம் அனைவரும் நம்முடைய குணத்தை திறனை எந்த இக்கட்டு [சூழ்நிலை ] வந்தாலும் எந்த சூழலிலும் மாற்றிகொள்ளாமல் நம்முடைய அவரவர்களின் தனித்தன்மையை பராமரிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்

பின்னர் இந்த 500 ரூபாய் யாருக்கு வேண்டும் என கேட்டார் உடன் அனைவரும் எனக்கு எனக்கு என தத்தமது கைகளை உயர்த்தினார் ஆயினும் ஒரு இளம் வாலிபன் தடதடவென மேடைக்கு ஓடிவந்து அந்த 500 ரூபாய் தாள் தனக்கு வேண்டுமென தன்னுடைய கையை நீட்டி பறித்து கொண்டார் 

உடன் அம்மேடை பேச்சாளர் பார்த்தீர்களா நம் அனைவருமே அந்த 500 ரூபாய் தாளை விரும்புகின்றோம் ஆனால் இந்த இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார் ஆம் நம்மை சுற்றி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன அவைகளை ஒருசிலர் மட்டுமே பயன்படுத்தி கொண்டு தம்முடைய வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கின்றனர்
மற்றவர்கள் அந்த வாய்ப்பு நம் கையில் தானாக வந்த விழும் அதன்பின் நாம் பயன்படுத்தி கொள்வோம் என சோம்பேறியாக இருக்கின்றோம் என்பதே உண்மை நிலவரமாகும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அதிர்ஷ்டமான மனிதன்!

முல்லாவும் அவரது மனைவியும் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் வீட்டுச் சுவர் பக்கமாய் ஏதோ சத்தத்தைக் கேட்டனர்.

முல்லா என்ன சத்தம் என்று பார்த்துவர கையில் வேட்டைத் துப்பாக்கியுடன் வெளியே வந்தார். தனது தோட்டத்தில் வெள்ளையாக ஏதோ அசைவதைப் பார்த்தார் முல்லா. துப்பாக்கியைத் தூக்கி குறிபார்த்து அதைச் சுட்டார் முல்லா.


காலையில் எழுந்து, தான் எதைச் சுட்டோம் என்று பார்ப்பதற்காக முல்லா தோட்டத்திற்கு போனபோது, அது காய்வதற்காக மரத்தில் போட்டிருந்த தனது மிகச் சிறந்த சட்டையாய் இருப்பதைக் கண்டார் முல்லா.

‘அதிர்ஷ்டம் கெட்டவரே! உங்களின் மிகச் சிறந்த சட்டையை நாசமாக்கிவிட்டீரே! என்று முல்லாவின் மனைவி அங்கலாய்த்தார்.

‘இல்லை. நானே பூமியில் அதிர்ஷ்டமான மனிதன். காலையில் அந்தச் சட்டையை கிட்டத்தட்ட அணியும் நிலையிலிருந்தேன். அந்தச் சட்டையை போட்டுக் கொண்டிருந்தால், உறுதியாக நான் கொல்லப்பட்டிருக்கலாம்’, என்றார் முல்லா.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கழுதையை தலைவான்னு கூப்பிடலாமா?

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.

எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?"
என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.



"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.

முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.

தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார்.  "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"

"இல்லை" என்றார் நீதிபதி.

சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகும் அவலச்சணமும்

ஒரு நாள் அழகும் அவலச்சணமும் ஒரு கடைகரையில் சந்தித்து கொண்டன

நாம் இருவரும் சேர்ந்து கடலில் குளிக்கலாமா என்று அழகு கேட்க அவலட்சணமும் ஒப்புகொண்டது. உடைகளை கடற்கரையில் வைத்துவிட்டு குளிக்க சென்றன


சிறிது நேரம் கழித்து குளித்தது போதும்னு அவலட்சணம் கரையேறியது, அங்கிருந்த அழகின் உடைகளை அணிந்தது கொண்டு அவலட்சணம் தன் வழியே சென்றது

பின்னர் குளித்து திரும்பிய அழகு தன் உடைகளை காணமல் தவித்து போனது. ஆடையில்லாமல் தெருவில் போக கூச்சமாக இருந்தது, எனவே வேறுவழி இல்லாமல் அவலச்சணத்தின் உடைகளை அணிந்து கொண்டு சென்றது.

அன்று முதல் இன்று வரை உலகத்தில் பலரும் ஆடையை வைத்து அழகையும் அவலச்சணத்தையும் தவறாக முடிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

சிலர், நிஜமான அழகை அடைந்தவர்கள், அதன் அசிங்கமான ஆடைகளை பார்த்து முகம் சுளித்து அதை ஒதுக்கி விடுகிறார்கள். வேறு சிலர் அழகின் உடைகளில் மயங்கி அவலச்சணத்தை கொண்டாடிகொண்டிருகிரார்கள்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்