RSS

உழைப்பின் பெருமை | மே தின சிறப்பு கதை

சிறுவூர் என்ற கிராமத்தில் முத்தப்பன்,  வேலப்பன் என்ற இரு நண்பர்கள் வசித்து வந்தனர். முத்தப்பன் நல்ல உழைப்பாளி! நிலத்தில் வியர்வை சிந்தி உழைப்பவன். ஆனால் வேலப்பன் ஒரு முழுச் சோம்பேறி! வேளாவேளைக்கு உண்டு உறங்கி வந்தான்.


இருவருக்கும் சிறிதளவு வயல்கள் இருந்தன. முத்தப்பன் தன் வயலில் நெல் விதைத்து நீர்பாய்ச்சி களை எடுத்து பாடுபட்டார். அவரது உழைப்பின் பயனாக வயலில் விளைச்சல் மிகுந்தது. முத்தப்பனின் வேலைக்காரர்களும் எஜமானனே வயலில் இறங்கி வேலை செய்கிறாரே நாமும் நன்றாக உழைக்க வேண்டும் ஏமாற்றக் கூடாது என்று சுறுசுறுப்பாக உற்சாகமுடன் வேலை செய்தனர். அதன் பயனாக நிறைய விளைச்சலை அறுவடை செய்தார் முத்தப்பன்.

நன்கு பாடுபட்ட முத்தப்பன் தன்னிடமிருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை ஐந்து ஏக்கராக மாற்றினான். அதே சமயம் வேலப்பன் தன்னிடமிருந்த சிறு நிலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தான். ஒரு நாள் வேலப்பன்  இது பற்றி முத்தப்பனிடம் முறையிட்டான்.

நண்பா நீயும் நானும் ஒரே அளவு நிலத்தை தான் வைத்திருந்தோம் இன்றோ நீ ஐந்து ஏக்கர் நிலத்திற்கு சொந்த காரனாகி விட்டாய் நானோ இருந்த நிலத்தையும் இழந்து கடன் காரனாக நிற்கிறேன். உனக்கு அதிர்ஷ்டம் அதிகமாக உள்ளது. நானோ துரதிருஷ்டசாலி! என்று வருத்தமுடன் கூறினான்.

முத்தப்பனோ! நண்பா நான் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியதற்கு காரணம் அதிருஷ்டம் இல்லை! உழைப்பு! நீ உன் நிலத்தில் இறங்கி ஒரு நாளேனும் வேலை செய்திருப்பாயா? மாட்டாய்! எல்லாவற்றிற்கும் வேலைக்காரர்கள் வைத்தாய்! சரி அவர்கள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா? என்று கண்காணிக்க கூட சோம்பல் பட்டாய்! நண்பா நாம் வியர்வை சிந்தி உழைத்தால் மண்ணும் பொன்னாகும். உரிமையாளன் சோம்பேறியாக இருந்தால் வேலைக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்! அவர்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் வெட்டி அரட்டை பேசி களைந்து சென்று விட்டார்கள் உன் பயிர் கவனிப்பாரற்று ஆடு மாடுகள் மேய்ந்து விளையாமல் போயிற்று!

நானோ தினமும் வயலில் இறங்கி உழைத்தேன்! வேலைக்காரர்களோடு வேலைக்காரனாக உடன் வேலை செய்தேன். இதில் இன்னொரு லாபமும் இருக்கிறது ஒரு வேலைக்காரனுக்கு கொடுக்கும் கூலியும் மிச்சமாகும் உரிமையாளன் அருகில் இருக்கிறான் என்ற அச்சத்தில் வேலைக்காரர்களும் ஒழுங்காக பணியாற்றுவார்கள். இதனால்தான் என் நிலத்தில் விளைச்சல் மிகுந்தது.

நீ உன் சோம்பேறித் தனத்தை உதறி எறி! ஒழுங்காக இருக்கும் சிறு நிலத்தில் உன் உழைப்பை காண்பி! நீயும் விரைவில் என்னை போல மாறி விடுவாய் என்றான் முத்தப்பன்.

வேலப்பனுக்கு தன் தவறு புரிந்தது! உழைப்பின் பெருமையை உணர்ந்தான். வயலில் இறக்கி வேலை செய்தான் முத்தப்பனை போல் சந்தோசமாக வாழ்ந்தான்

உழைப்பே உயர்வு தரும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வன்மை அழியும், மென்மை வாழும் | வாழ்க்கை கதை

 
ரொம்ப வயசாகி, சாகப்போற நேரத்துல ஒரு சந்நியாசி, தன்னோட சீடர்களுக்கு வாழ்க்கை தத்துவம் ஒன்றை புரியவைக்க நினைத்தார். எல்லாரையும் அழைத்து உக்கார வைத்து, அவங்களுக்கு தன்னோட பொக்கை வாயை திறந்து காண்பித்தார். 

அவ்வளவுதான், 'வாழ்க்கைத் தத்துவம் இதுதான்'னு சொல்லி போகச் சொல்லிட்டார். 

சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிட போகுதுன்னு குழம்பினவன், மெதுவாக குருவையே எழுப்பி கேட்டான்.

அவர் கேட்டார்.. 'என் வாய்குள்ள என்ன இருந்தது?'

'நாக்கும் உள்நாக்கும் இருந்தது!'

'பல் இருந்ததா?'

'இல்லை.'

'அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.'

நன்றி:  மக்கள் சந்தை 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மாத்தி யோசி ஆனால் நல்ல யோசி


நரி ஒன்று தாகத்தால் தவித்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது…? தண்ணீரைத் தேடி அலைந்தது. தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது.
கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.

‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’ நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.அங்கு நரி இருப்பதைக் கண்டது.

“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது. “நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்…………….!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மாற்று கோணம் நமக்கு முக்கியம் | சிந்தனை கதைகள்

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார்  ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். 

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்