RSS

புத்திசாலி கிளி | ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு... கதை

ஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும்.அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.''

அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,' என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.


நம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த மரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே! ''என்றார்.

அதற்கு அக்கிளியும், 'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.' என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.

ஜோடிகளை பிரிப்பது பாவம்மல்லவா...! | பறவைகளை கூண்டுக்குள் அடைக்காதீர்கள் | சுதந்திரம் நமக்குமட்டுமல்ல அவைகளுக்கும்தான்...!
ஆப்பிரிக்கா போயிட்டு வர கால தாமதமாகாதான்னு கேட்குறது புரியுது | இது கதைதான் | ரீலு சுத்துறான்னு சொல்லுவாங்கல்ல அது போல வச்சுக்கோங்க நன்றி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பூஜ்யம் ஒரு ராஜ்ஜியம் | ஆசிரியர் தின சிறப்பு கதை

ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.


ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.

""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது.

புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார்.

""ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.

அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.

""இப்போது?''

""பத்து!'' என்று மற்ற எண்கள் உரக்கக் கத்தின.

அடுத்து பூஜ்யத்தைப் பார்த்து, ""இப்போது தெரிந்து கொண்டாயா உன் மதிப்பு? "ஒன்று' என்ற சாதாரண எண் உன் சேர்க்கையால் பன்மடங்கு அதிக மதிப்பு அடைந்ததைப் பார்த்தாயா?'' என்றார்.

எல்லா எண்களும் மகிழ்ச்சியுடன் கை தட்டின.

""ஆமாம்... நான் சரியான இடத்தில் இருந்தால், நானும் பயனுடையவன்தான். நான் மற்றவருடன் சேர்ந்தால் நாங்கள் அனைவருமே அதிக மதிப்பு வாய்ந்தவர் ஆகிறோம்,'' என்று பூஜ்யம் மகிழ்ந்தது.

இது போலதான் நாம் எப்படி ஆகவேண்டும் எங்கு இருக்கவேண்டும் என நமக்கு வழிகாட்டினார்கள் ஆசிரியர்கள், நாமும் ஆசிரியர்களை வணக்குவோம் - ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் 

நன்றி
தினமலர்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்