RSS

உச்சியை தொட செவிடாய் இரு | அறிவு கதைகள்

சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்குள்ளே ஒரு ஓட்டப்பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன.

ஓட்டப்பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது. தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காண பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தை தொட வேண்டும். அது தான் போட்டி விதி. முதலில் தொடுபவர் வெற்றியாளர்.

போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை. உங்களால் அந்தப் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை நோக்கி கத்திக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் “இந்தத் தவளைகளால் இந்தக் கோபுரத்தில் உச்சியை தொடவே முடியாது! — சாத்தியமே கிடையாது!” என கூறினார்

கூட்டத்திலிருந்து இப்படியாக கோசங்கள் வந்த வண்ணமே இருந்தன.

மெல்ல ஒவ்வொரு தவளைகளாக, தங்களால் முடியாது என்ற வகையில் சோர்ந்து போட்டியிலிருந்து நீங்கி கொண்டன

“இதில எந்தத் தவளையும் அந்த உச்சிய தொடப்போவதில்லை . அது ரொம்ப கடினமானது” — கூடியிருந்தோர் தங்கள் கோசங்களை தொடர்ந்து கொண்டேயிருந்தனர்.
                         
இப்படியிருக்க, பல தவளைகளும் களைப்படைந்து, போட்டியிலிருந்து நீங்கிக் கொண்டது. ஆனால், ஒரேயொரு தவளை மட்டும் மேலே மேலே முன்னேறிக் கொண்டிருந்தது.

எல்லாத் தவளைகளும் கோபுர உச்சியைத் தொடுவது சாத்தியமற்றது என எண்ணி இடையிலேயே போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, ஒரு சின்னஞ் சிறிய தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது

சில வினாடிகளில் உச்சியை தொட்டு வெற்றியும் கண்டது


அனைவரும் வியந்து பொய் எப்படி அந்த சிறிய தவளையினால் மட்டும் முடிந்தது என வினாவினார்கள்

அப்போது தான் தெரிந்தது, கோபுர உச்சியைத் தொட்ட அந்தத் தவளைக்கு காது கேட்காது என்று.

“முடியாதவர்கள், அவர்களால் முடியாததை
உன்னாலும் முடியாது என்று சொல்லுவார்கள்.
சொல்லுபவர்கள் சொல்லட்டும். அவர்களிடம் நீ,
செவிடாக இருப்பதே சில நேரங்களில் பொருத்தமானது,”

உன் காதில் சங்கே ஊதினாலும் உன் வழி செல் | வெற்றி உனக்கே  

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தவறு சிறுசா இருக்க திருந்திக்கோ | தமிழ் அறிவு கதைகள்

மணி ஒரு சோம்பேறி பையன், அவனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அந்த ஊர்ல இருந்த ஒரு முனிவர் ஒருவர் கிட்ட சொன்னார். ” இவன் ரொம்ப சோம்பேரியா இருக்கான். என்ன சொன்னாலும் சில பழக்க வழக்கங்களை மாத்தவே மாட்டேங்கிறான். நீங்க தான் அவன திருத்தனும்” னு சொன்னார்.


முனிவர் ஒரு நாள் அவனை ஒரு காட்டுக்கு அழைத்து போனார். அங்க இருந்த ஒரு சிறிய செடிய பிடுங்க சொன்னார். உடனே ரொம்ப சுலபமா பிடிங்கி விட்டான்.

அப்புறம் கொஞ்சம் பெரிய செடிய பிடுங்க சொன்னார். கொஞ்ச முயற்சி பண்ணி பிடுங்கினான்.

இன்னும் கொஞ்சம் பெரிய புதர் மாதிரி இருந்ததை பிடுங்க சொன்னார் ரொம்ப கஷ்டப்பட்டு பிடுங்கினான். அதுக்குள்ள அவன் ரொம்ப களைத்து போனான் .

அப்புறம் ஒரு பெரிய மரத்தை காட்டி, அதை பிடுங்க சொன்னார். ஆனா அவனால முடியலை. என்னால முடியாது அப்படீன்னு சொல்லிட்டான்.

தாத்தா சொன்னார், ” இது பாரு, இப்படித்தான் நீ சின்ன பையனா இருக்கப்பவே உன்கிட்ட இருக்குற சோம்பலையும், சில கெட்ட பழக்க வழக்கங்களையும் மாத்திக்கனும். அது சுலபமா போய்டும் பெரியவனான்னா அது கிட்ட இருந்து விலகறது ரொம்ப கஷ்டம். விலகவும் முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி கேட்டு நடந்தேன்னா, நீ நல்லா இருப்பே” னு சொன்னார்.

பையனும் அவங்க அப்பா சொன்ன மாதிரி நல்லபடியா நடந்து வாழ்கையில பெரிய ஆளா ஆயிட்டான்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் திறமைக்கும் அறிவுக்கும் பரிசு

அனைவருக்கும் வணக்கம்

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி


தமிழ் அறிவு கதைகள் ஆரம்பித்து 3 வருடங்கள் 6 மாதங்கள் வெற்றிகரமாக தினம் தினம் வாசகர்கள் இணைந்து வருகிறார்கள். நமது கதைகளை பாண்டிச்சேரி, திருச்சி பண்பலைகளில் ஒளிபரப்பிக் கொண்டிருகிரார்கள். அனைவருக்கும் நன்றி | நான்காம் ஆண்டை வெகு விமரிசையாக கொண்டாட இருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற விரைவில் அந்த நல்ல செய்தி எல்லோருக்கும் தெரிவிக்கப்படும்.

நல்ல கதைகள் வாசககர்கள் உங்களிடம் இருந்து வரவேற்க்கபடுகின்றன. உங்களின் நல்ல படைப்புக்கு அருமையான பரிசு காத்திருக்கிறது


நிபந்தனைகள் விரைவில் அறிவிக்கிறோம் - பரிசை வெல்ல ஆயத்தமாக இருக்கவும்

மேலும் விபரங்களுக்கு tamilarivukadhaikal@gmail.com - ல் உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்

நன்றி
தமிழ் அறிவு கதைகள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்